என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வியாபாரிகள் சாலை மறியல்
நீங்கள் தேடியது "வியாபாரிகள் சாலை மறியல்"
தேன்கனிக்கோட்டையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு உள்ள கடைகளை அகற்றியதால் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பஸ் நிலையம் அருகே வனசரகம் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பு பீடாகடை உள்பட 10-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அலுவலகத்தின் முன்பு கேட் பகுதியை விரிவுப்படுத்த வனத்துற அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக அலுவலகம் முன்பு ஆக்கிரமித்து வைக்கப்பட்டு உள்ள கடைகளை அகற்றும் வேண்டும் என்று வியாபாரிகள் கடந்த சில நாட்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதுகுறித்து சிறிதும் கண்டு கொள்ளாத வியாபாரிகள் தொடர்ந்து வனசரக அலுவலகம் முன்பு கடைகளை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை வனத்துறை ஊழியர்கள் அலுவலகத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். இதனால் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள் திடீரென்று அலுவலகம் முன்பு திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்களிடம் பஸ் நிலையம் அருகே கடைகளை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
×

X